அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் , நிரந்தரமில்லா வேலைவாய்ப்பு பற்றி இன்று மூலைமுடுக்கு எல்லாம் பேசப்படுகிறது.
சுயசார்பில்லாமல் அடுத்த நாட்டின் பொருளாதரத்தை நம்பி காலத்தை ஓட்டும் நம் மக்கள் தங்களின் வீண் போராட்டத்தினால் மூடிய தொழிற்சாலைகள் தான் எத்தனை ! எத்தனை ?!!!
சென்னைக்கு இணையாக இருக்க வேண்டிய கோவை மாநகரம் சற்று பின் தங்கியதற்கு காரணம் தொழிலாளர் போராட்டங்களே !!
கரிச காட்டு மண்ணில் அருமையாய் விளைந்த பருத்தியை நம்பி கோவையில் ஆரம்பிக்கப்பட்ட மில்கள் நகர வளர்ச்சியின் விதை . படிப்பறிவு இல்லா மக்களுக்கு தேடி தேடி வேலை கொடுத்தனர் அன்று . அதுவும் PF,ESI, பணி நிரந்தரம் என அனைத்து வசதிகளுடன் . ஒரு குடும்பத்தில் ஒருவர் நிச்சயம் மில் தொழிலாளி . ஆண்களுக்கு இணையாக பெண்களும் மில் வேலைக்கு சென்றனர் . இவர்களால் பயன் அடைந்த முதலாளிகளும் ஆண்டுக்கு ஒரு முறை Bonus என அறிமுகப்படுத்தி Extra benefit அளித்தனர் . மில் வருமானத்தால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை உயர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை .
அடுத்த படிக்கு முன்னேற எண்ணி தங்கள் குழந்தைகளை தொழிற்கல்வி படிக்க வைத்தனர் . ஏனெனில் Textile Machinery, Pump Manufacturing , Foundry ஆகிய இன்ஜினியரிங் தொழில்கள் செழிக்க தொடங்கின. LMW,LGB,Pricol,Ramakrishna Steel, PSG Foundry , South India Viscose (Sirumugai) என வேலைவாய்ப்புகள் மக்களுக்கு குவிய தொடங்கின. சிக்கனத்தை பற்றி கோவை மக்களிடம் தான் கற்க வேண்டும் . சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்த வீடுகள் , பருத்தி காடுகளை அழித்து கிராமங்களை Concrete நகரமாக மாற்ற ஆரம்பித்தது.
நகர வளர்ச்சி ஆலமரமாய் கிளை பரப்பி வேலை தேடி வந்த பல மாவட்ட பறவைகளுக்கு நிழல் கொடுத்தது.
துடியலூரில் Texmo , நரசிம்ம நாய்க்கன் பாளையத்தில் Narasimha Mills, பெரிய நாய்க்கன் பாளையத்தில் LMW,Pricol , காரமடையில் Ramakrishna Steels , சிறுமுகையில் South India Viscose என கோவையில் இருந்து மேட்டுபாளையம் வரை தொழிற்சாலைகள் தான். நகரமே சங்கு ஒலியினால் தான் கண் விழிக்கும்.
சற்று வேர் ஊன்றியவுடன் , மக்களுக்கு தங்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைவோ என தோன்ற தொடங்கி சின்ன சின்ன பிரசனைகள் பெரிதாக ஆரம்பித்தது. மில்களில் போனஸ் போராட்டங்கள் மழை காளான் போல் தீபாவளி வந்ததும் முளை விட தொடங்கியது. வருடாவருடம் தீபாவளி போனஸ் என்பது இந்தியா பாகிஸ்தான் சமாதான ஒப்பந்தம் போல் பண்டிகை முடிந்தும் பேசி கொண்டு இருந்தார்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக . பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து போனஸ் போன்ற சலுகைகள் கொடுக்க முடியாத முதலாளிகள் மில்களை மூட ஆரம்பித்தனர். பெருவாரியான மில்கள் மூடப்பட்டது. இன்ஜினியரிங் தொழிலிலும் போராட்டங்கள் அரும்ப துவங்கியது . திறம் வாய்ந்த நிர்வாகதினரால் மட்டுமே அவை தகர்த்து எறியப்பட்டது.
பேசி தீர்க்க முடியாத பிரசனை இல்லை. ஆனால் வீண் போராட்டத்தினால் நிர்வகதினர்க்கு நெருக்கடியை தான் உருவாக்குகிறோம் . Textool , Ramakrishna Steel ஆகியவை போராட்டத்தினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள். சொந்த தொழில் என்பது கோவை மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் அவற்றின் பிள்ளையார் சுழி இப்பெரிய நிறுவனங்கள் தான்.
கோவையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனம் Pricol. நிரந்தர மற்றும் Contract பணியிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். கோவையிலே மிக அதிக போனஸ் தர கூடிய நிறுவனம். பல ஆண்டுகளாக சின்ன சின்ன பிரசனைகளுடன் வேலை செய்து வந்தவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். விளைவு இன்று 2000 Contract தொழிலாளிக்கு வேலை இல்லா நிலை. கூட்டமாக இருந்து பார்க்கும் பிரசனைகள் , தனி ஒரு குடும்பத்தின் பார்வையில் பூஜியம்.
தனி மனித வளர்ச்சி , குடும்பத்தின் உயர்வு , துணை தொழில் முனைவோர் வளர்ச்சி , நிறுவனத்தை சுற்றி உள்ள சிறு வணிகர் வியாபாரம் என அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தின் வளர்ச்சி பொறுத்து தான் அமையும் .
படித்து பட்டம் பெற்றவர்களுகே ஒரு Pink Slip கொடுத்தால் வேலை காலி . தொழிலாளர் சட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதை ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும் . தொழிலாளர் பிரசனைகளை ஒரு குடும்ப பிரச்னையாக பாவித்து தீர்க்க முயல வேண்டும்.
"போராட்டத்தின் மூலம் தீர்வு என்றால் அது இலவு காத்த கிளி கதை தான் !!"

இன்றுதான் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (கடுகு அவர்களின் பதிவுக்கு உங்கள் பின்னூட்டத்தின் மூலம் உங்கள் பதிவுக்கு வந்தேன்.) இப்போது நீங்கள் பதிவுகள் எழுதுவதில்லையா? உங்கள் பதிவுகள் யெல்லம் படித்தேன். கடைசிப் பதிவில் கோயமுத்தூரின் தொழில் வளம் நாசமாக்கப்பட்டிருப்பதின் ஆதங்கம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. சுதந்திரத்தையும், உரிமைகளையும் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத ஜனங்கள். மற்றும் அயோக்கிய தலைவர்கள். பெரும்பான்மையான தொழிற்சங்க தலைவர்கள் முதலாளியை ப்ளாக் மெயில் செய்ய வேலை நிறுத்த உத்தியை கையாள்கிறார்கள். மூடத்தனமாகவோ, பயத்தினாலோ தொழிலாளர்கள் தலைமைக்கு கட்டுப்படுகிறார்கள். ஸ்ட்ரைக் சமயத்திற்கான சம்பளம் போனாலே அவர்கள் குடும்பத்தில் அடுப்பு எறியாது. வேலையே போன ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? சிலர் கற்றங்களில் ஈடுபடுகிறார்கள். நேர்மையான, மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்ட தலைவர்கள் நாட்டுக்கு அவசியம்.
ReplyDeleteஉங்கள் மற்ற பதிவுகளில், உங்கள் மாமனாரைப் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. அவரை இழந்தது உங்கள் குடும்பத்துக்கு உண்மையிலேயே பெரிய நஷ்டம் தான்.
வேலை / குடும்பப் பணி இவற்றுடன் தொடர்ந்து எழுத முயலுங்கள். வாழ்த்துக்கள்.
- ஜெகன்னாதன்