Saturday, 23 May 2009

தேள் கடி


தலைப்பை பார்த்து ஏதோ தேள் கடிக்கு வைத்தியம் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். மனிதனின் குணங்களை பற்றி சொல்லும் புத்தகத்தை பற்றியது.

ஆங்கிலத்தில் லிண்டா கூட்மன் எழுதிய SUN SIGNS புத்தகத்தை அனைவரும் அறியும் வாய்ப்பு குறைவு.


அருமையான புத்தகம். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவர்கள் இந்த குணங்களுடன் தான் இருப்பார்கள் என வரையறுத்து சொல்ல பட்டு இருக்கிறது.

90% சரியாக உள்ளது . பன்னிரு மாதங்களுக்கும் Aries (March 21- April 20) , Taurus (April 21 - May 21), Gemini (May 22 - June 21), Cancer ( June 22 - July 23), Leo (July 24 - Aug 23), Virgo( Aug 24- Sep 23), Libra (Sept 24 - Oct 23),Scorpio (Oct 24 - Nov 22),Saggitarius (Nov 23- Dec 21),Capricorn ( Dec 22- Jan 20),Aquarius ( Jan 21 - Feb 19),Pisces ( Feb 20 - Mar 20) என பிரித்து அதுவும் ஆண்,பெண் ,குழந்தையாக இருந்தால் என்ன குணங்களுடன் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
ஆதிக்கம் செலுத்த கூடிய personality என பார்த்தால் அது scorpio மற்றும் taurus மாதங்களில் பிறந்தவர்கள் தான்.
Gemini இரட்டை குணம் உடையவர்கள். அவர்களின் இன்னொரு முகத்தை பற்றி தெரிந்து கொள்வது கடினம்.
மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது , மனம் புண்படாமல் பேசுவது, விட்டு கொடுப்பது,மொத்தத்தில் அன்பானவர்கள் pisces மாதத்தில் பிறந்தவர்கள்.
குடும்பமே கோவிலாக நினைத்து வாழ்பவர்கள் cancer மாத பெண்கள்.
ஆனால் அழுமூஞ்சிகள் .
நேர்மை கண்டிப்பாக saggitarius இடம் கிடைக்கும். தவறிலும் ஓர் நேர்மை இவர்களிடம் இருக்கும். இவர்கள் கோமாளியாகவும் , புத்திசாலியாகவும் இரு வேறு குணங்களை உடையவர்கள்.
நான் அனைத்து sun signs பற்றி முழுதும் படிக்கவில்லை. ஆனாலும் scorpio பற்றி
அறிந்தது 100% உண்மை. Living with Scorpio enables me to compare the characteristics mentioned in the book. Also i have so many scorpio's around me.
Scorpio
சாதிக்க பிறந்தவர்கள். நினைத்ததை அடையும் வரை ஓய மாட்டார்கள்.
கொடுமையான உண்மையை பேசுபவர்கள். மற்றவரின் விருப்பு , வெறுப்புகளை பற்றி துளியும் கவலை படாதவர்கள். வெளியே குளுமையாக தெரிந்தாலும் உள்ளே கொதிக்கும் அனல் படர்ந்திருக்கும். காதல் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் துளிர்த்திருக்கும்.
ஒரு குழுவில் என்னால் ஒருவரின் குணநலன்களை பற்றி சொல்ல முடியும் என கூறினால் " எங்கே என்னை பற்றி சொல் பார்க்கலாம் " என பதில் வந்தால் நிச்சயம் அவர் SCORPIO Personality தான். பாராட்டும் ஒரு குணம் என்னவென்றால் , போட்டியில் ஜெயிப்பதற்குக்காக கருத்தை மாற்றி சொல்ல மாட்டார்கள். அவர்களின் முக்கிய முடிவுகள் மற்றவரின் கருத்துகளால் ,மாற்றம் பெறுவதில்லை.
STUBBORN SCORPIO
சக பயணியாக பயணிக்க தைரியம் வேண்டும் என்னை போல !!!!!????????
மொத்தத்தில் இந்த ராசி தோட்டத்தில் SCORPIO ஒரு காகித மலர் .

உங்கள் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள பார்க்க கீழ் கண்ட URL விஜயம் செய்யவும்.

Tuesday, 19 May 2009

உறவுகளின் அறிமுகம் - ஒரு குடும்ப விழா




சுற்றம் சூழ வாழ்ந்த காலம் போய், உறவுகளை அறிமுகம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம். முதல் சுற்று சொந்தங்கள் , இரண்டாம் சுற்று சொந்தங்கள் என உறவுகளை பிரித்து வீட்டு விழாக்களுக்கு அழைப்பது இன்றைய நாகரிகம் ஆகி விட்டது . உறவு வட்டம் சுருங்கி , நட்பு வட்டம் விரிவடைந்துள்ளது.அதற்கு காரணம் தற்போது உள்ள வாழ்க்கைமுறை ஆகும். வீட்டு விழா என்பது அனைவரும் கூடும் ஒரு ஒருங்கிணைப்பு
விழாவாகத்தான் இருக்கிறது. பள்ளி , கல்லூரிகளில் கொண்டாடப்படும் வெள்ளி விழா போல இன்று குடும்ப ஒருங்கிணைப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது.

என் மாமியார் வீட்டு சொந்தங்களின் get together function சென்ற ஆண்டு கொண்டாடினோம். தலைமுறை இடைவெளி அதிகம் இருந்தாலும் அனைவரும் இந்த விழாவை நிகழ்த்த அனுமதி அளித்தனர்.


என் கணவர், சிறிய நாத்தனார்கள் விமலா , உமா , கணவரின் மாமா பெண் பிரேமா ஆகியோர் ஆர்வத்துடன் function agenda, family book ( everyone's address with date of birth, phone no), menu ஏற்பாடு செய்தனர்.

என் மாமியார் உடன் பிறந்தோர் ஆறு பேர். ஆண்கள் மூவர், பெண்கள் மூவர்.

என் பெரிய மாமியார் இருவரும் கொள்ளு பேரன் எடுத்து விட்டனர்.

இரண்டாவது மாமியார் ராமானுஜர் உபாசகர். கண்கள் சற்று மங்கலாக தெரிந்தாலும் நன்றாக நீச்சல் அடிப்பார் இந்த வயதிலும்.தலைமுறை இடைவெளி இல்லாமல் நன்றாக உரையாடுவார். விழாவின் இறுதியில் எங்களுடன் டான்ஸ் ஆடினார்.

சின்ன மாமியார் உலக விசயங்களை கைக்குள் வைத்து இருப்பார்.
மொத்தத்தில் பெண்கள் அனைவரும் புத்திசாலிகள். மாமியாருடன் பிறந்த ஆண்கள் அனைவரும் பாசம் மிகுந்தவர்கள். ராமு மாமா மட்டுமே இப்பொது இருக்கிறார் .

நான்கு தலைமுறை சொந்தங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் என் இரண்டவது மாமியார் தோட்டத்தில் ஒன்றாக கூடி களித்தோம்.
கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு பின் மன கசப்புகள் நீங்கி, உடன் பிறந்தவர்களுடன் பெரியவர்கள் சந்தோசமாக இருந்தனர். குழந்தைகள் அனைவரும் புதிய உறவுகள் அறிமுகமான குஷியில் பொழுதை களித்தனர்.
வீட்டுக்கு திரும்பும் நாள் அன்று ,ஏதோ ஒன்றை இழந்தது போல் தோன்றியது.
விழா கொண்டாடியதன் பலன், இன்று எங்கள் குழந்தைகள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாடுகின்றனர். அவர்களுக்கு புதிய உறவுகள் அறிமுகமாகி உள்ளன.
விழா முடிந்த இந்த ஓர் ஆண்டில் , உறவு பாலம் பலமடைந்து உள்ளது.
இந்த தலைமுறையின் முதல் திருமணம் வரும் மே மாதம் 28 ஆம் நாள் வருகிறது. இது மற்றுமோர் GET TOGETHER FUNCTION.
எங்கள் தோட்டத்தில் பல மலர்கள் இருந்தாலும் , அதில் வரும் வாசனை மனதை ஈர்க்கும் சம்பங்கி போன்றது.